பிகேஆர் ஆண்டுக் கூட்டத்தைப் புறக்கணிக்கவில்லை- பாரு பியான்

பொதுப் பணித்துறை அமைச்சர் பாரு பியான், கடந்த வாரம் பிகேஆர் ஆண்டுக் கூட்டத்தைப் புறக்கணித்ததாகக் கூறப்படுவதை மறுத்தார். அமைச்சின் அதிகாரத்துவ பணி இருந்ததால் அக்கூட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை என்றார்.

தகவல் தெரிவிக்கவில்லை. ஆண்டுக் கூட்டத்திலும் கலந்துக்கொள்ளவில்லை என்பதால் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் அவரைக் கடிந்து கொண்டதை அடுத்து பாரு இந்த விளக்கத்தை அளித்தார்.

ஆண்டுக் கூட்டத்தில் கலந்துக்கொள்ள இயலாது என்பதை ஆண்டுக்கூட்டச் செயலகத்திடம் தெரிவிக்குமாறு தம் அரசியல் செயலாளர் சக்கரியா அப்துல் ஹமிட்டிடம் கூறி அனுப்பியதாக அமைச்சர் சொன்னார்.

ஈப்போவில் பொதுப்பணி அமைச்சின் விளையாட்டு விழாவை முடித்து வைக்க வேண்டியிருந்தது. பின்னர் குவாந்தானில் கிழக்குக்கரை நெடுஞ்சாலை அலுவலகத்துக்கு வருகை. அதை அடுத்து ஒரு விருதளிப்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது என்று பாரு தெரிவித்தார்.

“சரவாக்கிலிருந்து பல பேராளர்கள் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். என்னுடைய சரவாக் பிகேஆர் தலைவர் பதவியும் முடிவுக்கு வருகிறது. மத்திய தலைமைத்துவப் பதவி எதற்கும் நான் போட்டியிடவில்லை.

“என்னைத் தெரிவு செய்தால் மீண்டும் சரவாக் தலைவராவேன், இல்லையேல், கட்சியில் நான் ஒரு சிறிய ஆள், அவ்வளவே”, என்று பாரு குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.