ஹாடி : முஸ்லிம்கள் ஐசெர்டை எதிர்ப்பது ‘கட்டாயமாகும்’

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், முஸ்லிம்கள் அனைவரும் இனப் பாகுபாட்டை ஒழிக்கும் அனைத்துலக ஒப்பந்த(ஐசெர்ட்) த்தை   அவசியம் எதிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஐசெர்ட் ஒப்பந்தத்தை ஏற்பது இஸ்லாத்தை மற்ற சமயங்களுக்கு “இணையாக” வைக்கும் என்று கூறிய அவர், அந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கும் முஸ்லிம்களையும் சாடினார்.

“அவப்பேறாக, அதைப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்களும் இருக்கிறார்கள் அல்லது புரிந்திருந்தாலும் புரியாததுபோல் நடிக்கிறார்கள்……இஸ்லாத்தையும் மற்ற சமயங்களையும் ஒரே நிலையில் வைத்து சமத்துவதுக்காக போராட விரும்புகிறார்கள்.

“இஸ்லாம்தான் சரியானது என்று சொல்வது முஸ்லிம்களுக்குக் கட்டாயமாகும் என்பதால் நாம் ஐசெர்டை எதிர்க்க வேண்டும். மற்ற சமயங்களுக்கு உரிமைகள் கொடுக்கலாம். ஆனால், மற்ற சமயங்களும் இஸ்லாமும் ஒன்றுதான் என்று கூறுவதை ஏற்க முடியாது.

“இந்த எல்லையைத் தாண்டிச் செல்ல முடியாது”, என ஹாடி நேற்றிரவு கோலா திரெங்கானு செராமா ஒன்றில் கூறியதாக இன்றைய நியு ஸ்ரேய்ட்ஸ் டைமஸ் அறிவித்துள்ளது.