திங்கள்கிழமை மக்களவையில் பிரதமர் துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி பேசிக் கொண்டிருந்தபோது கத்திக் கூச்சலிட்ட எதிரணி எம்பிகளை நாடாளுமன்ற உரிமை மற்றும் சலுகைக் குழுவின் விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்று டிஏபி பெருந் தலைவர் லிட் சியாங் கூறினார்.
“ அதுபோன்ற வெட்கக்கேடான சம்பவம் மீண்டும் நடக்கக் கூடாது.
“எம்பியோ அமைச்சரோ பேசும்போது அவரைப் பேச விடாமல் தடுக்க சத்தமிடுவதையோ கூச்சலிடுவதையோ அனுமதிக்கக் கூடாது”, என இஸ்கண்டார் புத்ரி எமி ஓர் அறிக்கையில் கூறினார்.
“அம்னோ மற்றும் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேதமூர்த்தி பேசி முடிக்கும்வரை காத்திருக்கும் நாடாளுமன்ற கண்ணியத்தைக் கடைப்பிடிக்காமல் போனது ஏன்?”, என்று வினவிய லிம், அது மலேசிய நாடாளுமன்ற வரலாற்றிலேயே “மிகவும் வெட்கக்கேடான நிகழ்வு” என்று வருணித்தார்.
வேதமூர்த்தி, எல்லா வகை இனப்பாகுபாடுகளையும் ஒழிக்கும் அனைத்துலக ஒப்பந்தம்(ஐசெர்ட்) தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்க முனைந்தபோது எதிரணி எம்பிகள் கத்திக் கூச்சலிட்டு அவரைப் பேச விடாமல் தடுத்தனர்.