நேற்று லங்காவி தங்கு விடுதியில் பின்லாந்து நாட்டவர் நால்வரைப் போலீசார் கைது செய்தார்கள். அவர்கள் பொது இடங்களில் சமயப் பிரச்சார கையேடுகளையும் அறிக்கைகளையும் விநியோகம் செய்தார்களாம்.
அவர்களுக்கு எதிராக போலீஸ் புகார்கள் செய்யப்பட்டதை அடுத்து வயது 27-க்கும் 60-க்கும் இடைப்பட்ட அந்நால்வரும் கைது செய்யப்பட்டதாக லங்காவி போலீஸ் தலைவர் முகம்மட் இக்பால் இப்ராகிம் கூறினார்.
கைது செய்தபோது அவர்களிடமிருந்து 47-பேனாக்கள், பைபள் வாசகங்களைக் கொண்ட 336 கையேடுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன என்று இக்பால் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் என்ன குற்றம் செய்து விட்டார்கள் என்பதை அறிய விரும்புகிறேன். கொலை செய்தார்களா? கொள்ளையடித்தார்களா? ஏமாற்றினார்களா?….. சொல்லுங்கள்.
அக்கையேடுகளில் நாட்டுக்கும், அரசாங்கத்துக்கும் எதிரான பரப்புரைகள் எதுவும் இருந்ததா? அக்கையேடுகளில் உள்ளவற்றைப் படிப்பவர்கள் அரசாங்கத்துக்கு எதிராகத் தூண்டப்பட்டிருக்கிறார்களா?
ஒரு வேளை அரசாங்கத்துக்கு எது தவறு என்று தெரிகிறதோ, அது உண்மையில் நியாயமானதாக இருக்கலாம். எனவே, இந்த நால்வரும் கைது செய்யப்பட்டதை நான் கண்டிக்கிறேன்.