சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடின் ஷாரி, சாலை அறிவிப்புப் பலகைகளில் தேசிய மொழியான மலாய் மொழி நிலைநிறுத்தப்படுவதை உறுதிப்படுத்தும் ஒரு தெளிவான கொள்கையை உருவாக்குமாறு ஊராட்சிக்குப் பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
2017-இல் மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்தில் அறிவிப்புப் பலகை தொடர்பாக வகுக்கப்பட்ட கொள்கையை அமலாக்க முயன்றபோது அதற்கு டேவான் பகாசா டான் புஸ்தகா(டிபிபி)வின் ஒப்புதல் கிடைக்காமல் போனதை அடுத்து அறிவிப்புப் பலகை விஷயம் ஒரு விவகாரமாயிற்று என்று அமிருடின் கூறினார்.
“அரசாங்கம் அக்கொள்கையை அமல்படுத்துமுன்னர் அதை டிபிபி-இன் பார்வைக்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும்.
“சீனர்கள் அதிகம் வாழும் பகுதிகளில்தான் பிரச்னை உருவானது. இதற்காக யாரையும் நான் குற்றம் சொல்ல விரும்பவில்லை.
“ஊராட்சிக்குப் பொறுப்பான ஆட்சிக்குழு உறுப்பினரிடம் விரிவான ஆய்வை மேற்கொண்டு நம் தேசிய மொழியை நிலைநிறுத்த தெளிவான, எல்லா இடங்களிலும் அமல்படுத்துவதற்குப் பொருத்தமான சமச்சீர் கொள்கை ஒன்றை உருவாக்குமாறு பணித்திருக்கிறேன்”, என அமிருடின் கூறினார்