சொத்து விவரம் அறிவித்தவர்களில், புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர், ங்கே கூ ஹாம், ஆக அதிக சொத்து கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. அவர், அவரின் மனைவி மற்றும் பிள்ளைகளின் மொத்த சொத்து மதிப்பு RM75.8 மில்லியன் ஆகும்.
ஒரு வழக்கறிஞரான ங்கே-வுக்கு, பேராக்கில் சொந்த சட்ட நிறுவனம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) சொத்துரிமை பிரகடனத்தின் அடிப்படையில், பிரதமர் மகாதிர் முகமட் மற்றும் அவரது மனைவி டாக்டர் சித்தி ஹஸ்மா முகமட் அலி இருவரும் RM32.4 மில்லியன் சொத்துக்களைக் கொண்டுள்ளனர்.
மூன்றாவது இடத்தில், தொழில்முனைவோர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமட் ரெட்ஜூவான் முகமட் யூசோஃப் மற்றும் அவரது மனைவியும் RM 23.08 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை வைத்துள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து, வீடமைப்பு மற்றும் உள்துறை அமைச்சின் துணை அமைச்சர் ராஜா கமாரூல் பஹ்ரீன் ஷா ராஜா அஹ்மட் பஹாருட்டின் ஷா, தனது மனைவி மற்றும் பிள்ளைகளோடு சேர்ந்து, 15.3 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை வைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுவரை, ஹராப்பானின் 25 அமைச்சர்கள் மற்றும் துணையமைச்சர்கள் மற்றும் 13 சட்டமியற்றுபவர்கள் தங்கள் சொத்துக்களை அறிவிக்கவில்லை.
அவர்களில், துணைப் பிரதமர் டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில், நிதியமைச்சர் லிம் குவான் ஏங், பிரதமர் துறை அமைச்சர்கள் லியூ வூய் கியோங் மற்றும் பி வேதமூர்த்தி, வெளியுறவு அமைச்சர் சைஃபுட்டின் அப்துல்லா, சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மொஹமட்டின் கெடாபி ஆகியோரும் அடங்குவர்.
அவ்வலைதளத்தில் மகாதீரின் மகனும் கெடா மந்திரி பெசாருமான, முக்ரிஸ்-இன் சொத்துக்கள் பற்றிய விபரங்கள் இல்லை. இருப்பினும், மேலே குறிப்பிட்ட தலைவர்களின் மாதாந்திர வருவாய் பட்டியலை அந்த வலைத்தளம் பட்டியலிட்டுள்ளது.
தங்களது வருமானம் மற்றும் சொத்துக்களை இன்னும் அறிவிக்காதவர் பட்டியலில், கூட்டரசுப் பிரதேசத் துணை அமைச்சர் ஷாஹாருட்டின் முகமட் சலே, வாரிசான் தலைவர் ஷாபி அப்டால் மற்றும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமும் இருக்கின்றனர்.
சொத்து அறிவிப்பு செய்த மற்றவர்களின் பட்டியல் பின்வருமாறு :
முஹிட்டின் யாஸ்சின் மற்றும் மனைவி – RM 14,365,140.65
டாக்டர் லீ பூன் ச்சாய், மனைவி மற்றும் பிள்ளைகள் – RM 13,670,000.00
லேர்ரி சூன் @ லேர்ரி ஸ்ங் வேய் ஸியேன் மற்றும் மனைவி – RM 11,785,477.00
கோபிந் சிங் டியோ மற்றும் மனைவி – RM 11,599,900.00
கமாருட்டின் ஜஃப்ஃபார் மற்றும் மனைவி – RM 11,373,127.59
டோனி புவா மற்றும் மனைவி – RM 10,410,697.00
ங்கா கோர் மிங் மற்றும் மனைவி – RM 10,028,894.42
எம் குலசேகரன் மற்றும் மனைவி – RM 8,500,000.00
வோங் லிங் பியூ மற்றும் மனைவி – RM 8,267,600.00
ராம் கர்ப்பால் சிங் – RM 7,924,229.11
ஜுரைய்டா கமாருட்டின் மற்றும் கணவர் – RM 7,791,544.54
கிறிஸ்தினா லியூ ச்சின் ஜின் மற்றும் கணவர் – RM 6,671,000.00
வில்லியம் லியோங் மனைவி மற்றும் பிள்ளைகள் – RM 6,485,735.00
முஸ்தாப்பா முகமட் மற்றும் மனைவி – RM 5,079,034.78
கருப்பையா முத்துசாமி – RM 4,850,000.00
டாக்டர் தான் யீ கியூ மற்றும் கணவர் RM 4,740,000.00
வில்லீ அனாக் மொங்கின் மனைவி மற்றும் பிள்ளைகள் – RM 4,683,722.75
லிம் கிட் சியாங் மற்றும் மனைவி – RM 4,329,000.00
டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் மற்றும் மனைவி – RM 3,734,050.00
லிம் லிப் ஏங் மற்றும் மனைவி – RM 3,604,637.50
பாரு பியான் மற்றும் மனைவி – RM 3,451,430.45
மன்சோர் ஒத்மான் – RM 3,295,000.00
வோங் கா வோ மற்றும் மனைவி – RM 3,229,000.00
தியோ நீ ச்சிங் மற்றும் கணவர் – RM 3,078,515.62
இக்நதியூஸ் டோரெல் மற்றும் மனைவி – RM 2,958,420.00