பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், இனவாதப் பாகுபாடுகளை அகற்றுவதற்கான சர்வதேச ஒப்பந்தத்தை (ஐ.சி.இ.ஆர்.டி) அங்கீகரிக்காது எனப் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அவ்வறிக்கையின்படி, புத்ராஜெயா மத்திய அரசியலமைப்பைத் தொடர்ந்து பாதுகாக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து இனங்களின் உரிமைகளும், அரசியலமைப்பால் பாதுகாக்கப்பட்டுதான் வருகின்றன என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
“நாட்டின் உருவாக்கத்தின் போது, அனைத்து இனங்களின் பிரதிநிதிகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு சமூக ஒப்பந்தத்தால் இயற்றப்பட்ட மத்திய அரசியலமைப்பை அரசாங்கம் தொடர்ந்து பாதுகாக்கும்,” என்று அது மேலும் கூறியுள்ளது.