ஐசெர்ட் விவகாரத்தில் வெளிவிவகார அமைச்சர் பதவி துறக்க வேண்டும், கைரி கூறுகிறார்

 

அனைத்து இனப் பாகுபாடுகளையும் அகற்றுவதற்கு வகை செய்யும் ஐநாவின் அனைத்துலக ஒப்பந்தத்தை (ஐசெர்ட்) அங்கீகரிக்கப் போவதில்லை என்ற அரசாங்கத்தின் முடிவுக்காக வெளிவிவகார அமைச்சர் சைபுடின் அப்துல்லா இராஜினாமா செய்ய வேண்டும் என்று ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுடின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்குப் பொறுப்பேற்று வெளிவிவகார அமைச்சர் இராஜினாமா செய்ய வேண்டும். இது ஒரு சாதாரணமான தவறல்ல என்று அவர் டிவிட் செய்துள்ளார்.

பிரதமர் மகாதிர் ஐநா பொதுச்சபையில் ஐசெர்ட்டை அங்கீகரிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். அவர் இதை ஒரு “கம்போங் செராமா”வில் கூறவில்லை என்றார் கைரி.

இதற்கு முந்திய ஒரு டிவிட்டில், புத்ரா ஜெயாவின் இந்த முடிவு எதிர்பார்க்கப்பட்டதுதான் என்று கைரி தெரிவித்துள்ளார்.

சைபுடினும் விஸ்மா புத்ராவும் இது குறித்து ஆழ்ந்து சிந்திக்காமலும் ஐநா பொதுச் சபையில் மகாதிர் ஐசெர்ட்டுக்கு அங்கீகாரம் அளிக்க ஒப்புதல் தராமலும் இருக்க அவரை சம்மதிக்க வைக்கத் தவறியதும் பெரும் தவறாகும் என்று கைரி மேலும் கூறினார்.

இப்போது இது ஒரு தர்மசங்கடமான, ஆனால் தவிர்க்க முடியாத, பின்வாங்கல் என்றாரவர்.