இந்திரா காந்தி வழக்கு விசயத்தில் அரசாங்கத்தைத் தலையிடும்படி கேட்க முடியாது, அமைச்சர் கூறுகிறார்

 

தமது முன்னாள் கணவரால் கடத்தப்பட்ட தமது ஒன்பது வயது மகளை தேடும் இந்திரா காந்தியின் பணியில் அரசாங்கம் தலையிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட முடியாது என்று நடப்பில் சட்ட அமைச்சர் லியு  வெய் கியோங் கூறினார்.

தமது முன்னாள் கணவருக்கு எதிராக இந்திரா வழக்குத் தொடர்ந்திருந்ததால், அவரது மகளைக் கண்டுபிடிப்பதற்கான சட்ட நடவடிக்களை மீண்டும் அவர்தான் மேற்கொள்ள வேண்டும், பெடரல் நீதிமன்றம் குழந்தையின்  பராமரிப்பை அவருக்கு அளித்திருந்த போதிலும், என்று லியு த மலேசியன் இன்சைட்டிடம் கூறினார்.

இந்த வழக்கில், உண்மையில் அரசாங்கத்தைத் தலையிடும்படி கேட்க முடியாது, ஏனென்றால் இந்த வழக்கு முன்னாள் கணவருக்கு எதிராக தாயாரால் தொடங்கப்பட்டது. என்றாரவர்.

இந்தப் பிரச்சனை குறித்து நான் சட்டத் துறை தலைவரிடம் (டோமி தோமஸ்) கேட்க வேண்டியிருக்கிறது. நீதிமன்றம் எடுத்த முடிவு குழந்தையின் பாதுகாப்பை தாயாரிடம் கொடுக்க வேண்டும் என்பதாகும்.

குறிப்பிட்ட அந்த நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கி நடக்காவிட்டால், அது ஒரு நீதிமன்ற அவமதிப்பு போன்றதாகும் என்று அமைச்சரை மேற்கொள்காட்டி செய்தி கூறுகிறது.

கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து தமக்குத் தெரியாமல் ஒருதலைப்பட்சமாக இஸ்லாத்திற்கு மத மாற்றம் செய்யப்பட்ட மூன்று குழந்தைகளில் ஒன்றான பிரசானா டிக்சாவை திரும்பப் பெறுவதற்காக இந்திரா காந்தி தொடர்ந்து போராடி வருகிறார்.