நஜிப் அப்துல் ரசாக்கின் முன்னாள் உதவியாளர் ஷுக்ரி முகம்மட் சாலே பேங்க் ரக்யாட் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.
தேசிய கணக்காய்வுத் துறையின் 1எம்டிபி கணக்குத் தணிக்கை அறிக்கை 13வது நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யபப்டுவதற்குமுன் அதில் மாற்றங்கள் செய்யப்பட்டதில் அவருக்கும் தொடர்புண்டு என்று கூறப்படுவதை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பேங்க் கெர்ஜாசாமா ரக்யாட் சட்டத்துக்கிணங்க அந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தொழில்முனைவர் மேம்பாட்டு அமைச்சர் முகம்மட் ரெட்சுவான் முகம்மட் யூசுப் கூறினார்.
“அவர் பதவியில் இருந்தபோது எடுத்த முடிவுகள் மறுபரிசீலனை செய்யப்படும், வங்கியின் நலனைப் பாதிக்கும் என்று தெரிந்தால் அகற்றப்படும்”, என்றும் அவர் சொன்னார்.