கூட்டரசு நீதிமன்றத்தின் முதல் இந்திய பெண் நீதிபதி

முதன்முறையாக இந்திய பெண் நீதிபதி ஒருவர் மலேசிய கூட்டரசு நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர்தான் நீதிபதி பி. நளினி.

கூட்டரசு நீதிமன்றத்துக்கும் முறையீட்டு நீதிமன்றத்துக்கும் நீதிபதிகளாக பதவி உயர்த்தப்பட்டுள்ள ஒன்பது பேரில் நளினியும் ஒருவர்.

நீதிபதி நளினி தவிர்த்து கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளாகவும் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளவர்கள் வருமாறு: நீதிபதி தெங்கு மைமூன் துவான் மாட், நீதிபதி ஆபாங் இஸ்கண்டர் ஆபாங் ஹஷிம், நீதிபதி இட்ருஸ் ஹருன்.

ஐவர் உயர் நீதிமன்றத்திலிருந்து முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றனர். நீதிபதி இயு ஜென் கை, நீதிபதி லாவ் பீ லான், நீதிபதி முகம்மட் ஸபிடின் முகம்மட் டியா, நீதிபதி நோர் பீ அரிப்பின், நீதிபதி ஹாஸ் ஸானா மெகாட் ஆகியோரே அந்த ஐவருமாவர்.