சீபீல்ட் கலவரம்: தூண்டிவிட்டவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், அசிஸ் கூறுகிறார்

 

நேற்று, யுஎஸ்ஜெ 25, சுபாங் ஜெயா ஶ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் வன்முறையைத் தூண்டி விட்டவர்களுக்கு எதிராக போலீஸ் கடும் நடவடிக்கை எடுக்கும் என்று துணை உள்துறை அமைச்சர் முகமட் அசிஸ் ஜாமான் கூறினார்.

“கோவிலில் நுழைந்து குழப்பம் விளைவித்த கூட்டத்தினரை போலீஸ் விசாரித்து அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கும்.

“நாட்டின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் வேண்டுமென்றே சீர்குலைக்க முயன்றவர்களுடன் சமாதானம் இல்லை.

“பொது இடங்களை அழிக்கும் அளவிற்கு தூண்டுதலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் அவர்கள் நீதியின்முன் நிறுத்தப்படுவர்”, என்று அசிஸ் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

இந்த விவகாரத்தில் போலீசார் பாரபட்சம் காட்டமாட்டார்கள் ஏனென்றால் நாட்டின் சட்டங்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வது அவர்களின் கடமை என்று கூறிய அவர், அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தை தொழிலிய முறையோடு கையாண்ட போலீசாரை அவர் பாராட்டினார்.