தாக்கப்பட்டதன் காரணமாகவே அடிப் காயமடைந்தார், போலிசார் உறுதிப்படுத்தினர்

புத்ரா ஹைட்ஸ், சுபாங் ஜெயாவில் நடந்த ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயக் கலவரத்தில், தீயணைப்பு வண்டி மோதியதன் காரணமாகவே தீயணைப்பு வீரர், முஹம்மட் அடிப் முகமது காசிம் காயமடைந்தார், மாறாக அவர் தாக்கப்படவில்லை என்று கூறப்படுவதில் உண்மையில்லை என்று காவல்துறை தலைவர் புஸி ஹரூன் கூறியுள்ளார்.

கிடைக்கப்பட்ட தகவல்களின் மூலம், சமூக வலைத்தளங்களில் பரவிவருவதைப் போல், முஹம்மட் அடிப், 25, தீயணைப்பு வண்டி மோதி காயமடையவில்லை என்றார் அவர்.

“அவர் தாக்கப்படவில்லை என்றால், இந்த அளவிற்கு மோசமாக காயமடைய வாய்ப்பில்லை, இப்போது நாங்கள் அந்த வீடியோ கிளிப்-ஐ சமூக வலைத்தளத்தில் பரவச்செய்த நபரைத் தேடி வருகிறோம்.

“அடிப்-ஐ அடித்து, காயப்படுத்திய நபரையும் நாங்கள் தேடி வருகிறோம். இதுபற்றி தகவல் தெரிந்தவர்கள், காவல்துறையினரின் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டுமென நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார் அவர்.

நேற்று, முஹம்மட் அடிப் தாக்கப்படவில்லை, தீயணைப்பு வண்டி மோதியே அவர் காயமடைந்தார் என்று கோயில் நிர்வாகம் கூறியிருந்தது, இருப்பினும், மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை இதனை மறுத்தது.

-பெர்னாமா