அகோங் திருமணம் செய்து கொண்டாரா?: தெரியாதே, மகாதிர்

 

யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் முகம்மட் V திருமணம் செய்து கொண்டுள்ளார் என்று சமூக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வமான தகவல் தம்மிடம் இல்லை என்று பிரதமர் மகாதிர் இன்று கூறினார்.

“எனக்குத் தெரியாது. அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்துதல் ஏதும் என்னிடம் இல்லை, ஆகவே நான் எதுவும் சொல்ல முடியாது”, என்று கூறப்படும் திருமணம் பற்றி கேட்ட போது அவர் பதிலளித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் சீபீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் குறித்த அறிக்கையை வெளியிட்ட பின்னர், அவரிடம் இத்திருமணம் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.

  • பெர்னாமா