அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியர்களின் ஆர்வத்தை ஈர்த்த இக்குவானிமிட்டி ஏலம்

1எம்டிபி நிதியைத் தவறாகப் பயன்படுத்தி வாங்கப்பட்டது என்ற காரணத்திற்காக, மலேசிய அரசாங்கம் கையகப்படுத்திய இக்குவானிமிட்டி ஆடம்பரக் கப்பலின் ஏலம்   அமெரிக்கா, ஐரோப்பியா மற்றும் ஆசிய நாடுகளின் பணக்காரர்களை அதிகம் ஈர்த்துள்ளது.

கடந்த ஒரு மாதக் காலமாக விற்பனையில் இருந்த அக்கப்பலின் ஏலம், நேற்று மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது.

“நிறைய பேர், இக்குவானிமிட்டியை வந்து, பார்த்து சென்றுள்ளனர்,” என்று சட்டத்துறை தலைவர் இலாகாவைச் சார்ந்த சட்டக்குழுவினர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், அக்கப்பல் விற்பனை முடியும் வரை, அதன் விலை மதிப்பை பொதுவில் தெரிவிக்க முடியாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

“விற்பனை முடிவடையும் வரை, இக்குவானிமிட்டியின் மதிப்பு இரகசியமாக வைக்கப்படும், அதைப்போலவே நேர்மை செயல்முறைகளைப் பாதுகாக்க, வாங்குபவர்களின் அடையாள இரகசியமும் காக்கப்படும்,” என்று அவர்கள் கூறியுள்ளனர்.