மஹ்ட்சிர் காலிட்டிடம் எம்ஏசிசி 8 மணி நேரம் விசாரணை

சரவாக்கின் உட்புறப் பள்ளிகளில், RM2.5 பில்லியன் மதிப்புள்ள சூரிய ஆற்றல் திட்டம் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), முன்னாள் கல்வி அமைச்சர் மஹ்ட்சிர் காலிட்டிடம், சுமார் 8 மணி நேரம் விசாரணை செய்துள்ளது.

நேற்று காலை, சுமார் 10 மணியளவில் புத்ராஜெயா, எம்ஏசிசி அலுவலகம் வந்த அம்னோ உதவித் தலைவருமான அவர், மாலை 6 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாகக் கூறப்படுகிறது.

தொடர் விசாரணைக்காக, இன்று மீண்டும் அவர் அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த அக்டோபர் 16-ம் தேதி, இவ்வழக்குத் தொடர்பான விசாரணைக்கு முதல் முறையாக எம்ஏசிசி அலுவலகம் வந்த அவர், சுமார் 5 மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.

இவ்வழக்கில், முன்னாள் பிரதமரின் மனைவி ரொஸ்மா மன்சூர் மற்றும் அவரின் உதவியாளர் ரிஷால் மன்சோர் இருவரும் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.