புத்ரா ஜெயாவால் எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுக்க இயலாது- மகாதிர்

புத்ரா ஜெயா தன்னால் முடிந்தவரை மக்களின் வாழ்க்கைச் செலவினத்தைக் குறைக்க பாடுபடுகிறது என்று
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். ஆனால், எல்லாவற்றையும் இலவசமாக வழங்க இயலாது.

“நாங்கள் (பக்கத்தான் ஹரப்பான்) எங்களின் தேர்தல் அறிக்கையில் மக்களின் வாழ்க்கைச் செலவினத்தைக் குறைக்க முடிந்தவரை பாடுபடுவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தோம். மக்களின் வாழ்க்கைச் செலவினம் முழுவதையும் அரசாங்கம் ஏற்பதாக இருந்தால் மலேசியாவால் எதையும் சேமிக்க முடியாது போகும்.

“மக்களிடம் வசூலிக்கப்படும் வரிப்பணம்தான் அரசாங்கத்தின்  வருமானம். அந்த வகையில் வாழ்க்கைச் செலவுக்காக பயன்படுத்தும் பணம் மக்களின் பணம்தான்” , என்றவர் சுட்டிக்காட்டினார். வாழ்க்கைச் செலவினத்தை மேலும் குறைப்பதற்கான ஆலோசனைகள் இருந்தால் மக்கள் தாராளமாக அவற்றைத் தெரிவிக்கலாம் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

மகாதிர் இன்று புத்ரா ஜெயாவில் மை100, மை50 வரையற்ற பயணச் சலுகைச் சீட்டுத் திட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.