துணைப் பேரரசர் சுல்தான் நஸ்ரின் ஷா, நாட்டில் உள்ள பல்வேறு இன, சமயத்தாரிடையே வன்முறைகளையும் வெறுப்பையும் தூண்டிவிடும் வகையில் நடந்துகொள்ளாதீர்கள் என மக்களுக்குக் குறிப்பாக தலைவர்களுக்கு அறிவுறுத்தினார்.
அரசியல் போட்டாபோட்டியின் விளைவாக நாட்டின் நல்லிணக்க நிலை கெடுவதைக் கண்டு வருத்தமடைவதாக அவர் கூறினார்.
“வெற்றி அடைந்ததால் சில அரசியல் தலைவர்கள் இறுமாப்பு கொள்கிறார்கள். தோல்வி அடைந்தவர்களோ பழிவாங்கத் துடிக்கிறார்கள்.
” வெற்றியாளர்களுக்குத் தேவை பணிவு, அடக்கம். தோற்றவர்கள் இறைவன் தீர்ப்பு என்று (தோல்வியை) ஏற்றுக்கொள்ள வேண்டும்”, என்றார்.
பேராக் ஆட்சியாளரான சுல்தான் நஸ்ரின் இன்று சுல்தான் அஸ்லான் ஷா பல்கலைக்கழகத்தின் 11வது பட்டமளிப்பு விழாவில் பேசினார்.