நிதி அமைச்சரைவிட மேலான திட்டங்களை எங்களால் கொண்டுவர முடியும்- மசீச இளைஞர்கள்

நிதி அமைச்சர் லிம் குவாங் என்ன பெரிய திட்டங்களைக் கொண்டு வந்தார், அவற்றைவிட மேலான திட்டங்களை உருவாக்கிக் காட்டப்போவதாக மசீச இளைஞர் பகுதி சூளுரைத்துள்ளது.

அதற்காக ஒரு புதிய குழுவை அமைக்கப் போவதாக மசீச இளைஞர் அணியின் புதிய தலைவர் நிக்கோல் வொங் கூறினார். அக்குழு மக்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள உதவும்.

“நாட்டை ஆளும்போது மக்கள் பணம் பண்ணுவதற்கு வகை செய்ய வேண்டும்…..வர்த்தகத்தை வலுப்படுத்துவது ஒரு வழி”, என்றவர் இன்று மசீச இளைஞர் பேரவையில் உரையாற்றும்போது கூறினார்.

பெரும்பாலும் நடுத்தர மக்களையும் வர்த்தக சமூகத்தினரையும் உறுப்பினர்களாகக் கொண்டுள்ள மசீச-வால் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஆக்ககரமான கருத்துகளைத் தெரிவிக்க முடியும்.

“லிம்மைக் காட்டிலும் மேலான கருத்துகளை மசீச உருவாக்க முடியும். என்று நம்புகிறோம். அதன்வழி மக்கள் பெரும் செல்வத்தை அள்ளிக் குவிக்க முடியும். மசீச-வும் மக்கள் ஆதரவை மீண்டும் பெறும்.

“கட்சியை உருமாற்றி அமைக்க இது ஒரு வழி, இல்லையா?”, என்று வினவியவர், புதுக் குழு இளைஞர்கள்மீது தனிக் கவனம் செலுத்தும் என்றார்.