சரிபார்க்கப்படாத தேர்தல் முடிவு குறிப்புகளைப் பெற்றவுடன் தேர்தல் ஆணையம் (இசி) அந்த முடிவுகளை உடனே வெளியிடும், அப்போதுதான் இசி மலேசியாகினியைப் போல் வேகமாக இருக்க முடியும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் அஸ்ஹார் அஸிஸான் ஹருண் கூறுகிறார்.
நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கும் பல நடவடிக்கைகளில் ஒன்று சரிபார்க்கப்படதா பாரம் 14-ஐ பெற்றவுடன் அதில் அடங்கியுள்ள தகவலை வெளியிடுவது (வாட்ஸஅப் வழி அதனைப் பெற்றவுடன்).
இது முடிவுகள் அல்ல. இது சரிபார்க்கப்படாத பாரம் 14 லிருந்து பெற்ற தேர்தல் முடிவு குறிப்புகள்.
மலேசியாகினி அதன் தேர்தல் முடிவு குறிப்புகளை அதே ஏஜென்டிடமிருந்துதான் பெறுகிறது, அப்படியானால் நாம் ஏன் அதைச் செய்ய முடியாது என்று அவர் செய்தியாளர்களிடம் நாடாளுமன்றத்தில் கூறினார்.