கட்சித் தாவல் தடுப்புச் சட்டம் தேவை- டிஏபி இளைஞர்கள்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கட்சித் தாவுவதைத் தடுக்க பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் சட்டமியற்ற வேண்டும் என்று டிஏபி இளைஞர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

டிஏபி இளைஞர் தலைவர் பதவிக்காலம் முடிந்து வெளியேறும் வொங் கா வோ, அதுபோன்ற சட்டத்தைக் கொண்டுள்ள இந்தியா, தைவான், உகாண்டா, பாப்புவா நியு கினி முதலிய 41 நாடுகளை மலேசியாவும் பின்பற்ற வேண்டும் என்றார்.

அண்மையில் பிஎன் எம்பிகள், குறிப்பாக அம்னோவைச் சேர்ந்தவர்கள் பக்கத்தான் ஹரப்பானுக்குக் கட்சி மாறி வந்தது ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளை மீறும் வருத்தமளிக்கும் விசயமாகும் என்றாரவர்.

“பங்காளிக் கட்சிகள் விரிவடைவதையும் வலுப்பெறுவதையும் காண விரும்பினாலும் மாற்றுக் கட்சிகளின் எம்பிகளான எங்களின் எதிரிகளையும் பகைவர்களையும் ஏற்றுக்கொள்வது முடியாத செயலாகும்”, என இன்று செர்டாங் ஜெயாவில் டிஏபி இளைஞர் காங்கிரசில் வொங் கூறினார்.