அரசாங்கத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரம் சுய நலனை நிறைவேற்றிக் கொள்வதற்காக அல்ல

அரசாங்கத்துக்கும் அதன் பணியாளர்களுக்கும் கடமையைச் செய்வதற்காக அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறதே தவிர அவர்களின் சுயநலத்துக்காக அல்ல என்பதைப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் நினைவுறுத்தினார்.

புத்ரா ஜெயாவில் பிரதமர் துறையின் மாதாந்திர பணியாளர் கூட்டத்தில் பேசிய மகாதிர், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் நாடு முன்னேற்றம் அடையாது. சமுதாயத்தில் ஒழுக்கமும் கெடும் என்றார்.

“அதனால்தான் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் கவனத்துடன் செயல்பட வேண்டும். அந்த அதிகாரத்தைக் கொண்டு ஏதாவது செய்ய முனையும்போது அதன் விளைவு நாட்டுக்கு நல்லதல்ல என்கிறபோது அப்படிப்பட்ட அதிகாரத்தைப் ப்யன்படுத்தாமலிருப்பதே நல்லது. அந்த அதிகாரத்தை எப்படி முறையாக பயன்படுத்துவது என்று தக்கவர்களிடம் கலந்தாலோசிப்பது நல்லது”, என்றார்.