கலவரம் பற்றிய விசாரணைக்கு உதவ சந்தேகப் பேர்வழிகள் ஆலயத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்

சுபாங் ஜெயா, யுஎஸ்ஜே 25-இல் உள்ள ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயக் கலவரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் சிலர் இன்று போலீஸ் விசாரணைக்கு உதவ ஆலயத்துக்குக் கொண்டு வரப்பட்டனர்.

லாக்-அப் உடை அணிந்த அவர்கள் பிற்பகல் மணி 12.45க்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு 1.10 அளவில் திரும்பக் கொண்டு செல்லப்பட்டனர்.

அவ்விடத்தைச் சுற்றி வந்த பெர்னாமா சுமார் 50 போலீசாரும், கூட்டரசுச் சேமிப்புப் படையினரும் அங்கிருக்கக் கண்டது.

நேற்று உள்துறை அமைச்சர் முகைதின் யாசின், அவ்வழக்கு விசாரணைக்கு உதவ போலீசார் இதுவரை 58 பேரைக் கைது செய்திருப்பதாகக் கூறினார். கைது செய்யப்பட்டவர்களில் 18 பேர் இந்தியர், இருவர் சீனர், 38பேர் மலாய்க்காரர்கள்.