ஐஜிபி: சுபாங் ஜெயா ஆலயத் தகராறு தொடர்பில் இதுவரை 83 பேர் கைது

சுபாங் ஜெயா இந்து ஆலயச் சச்சரவு தொடர்பில் கைதானவர் எண்ணிக்கை 83ஆக உயர்ந்துள்ளது.

அனைவரும் உள்நாட்டவர் என்றும் நவம்பர் 26, 27ஆம் நாள்களில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயக் கலவரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என்றும் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் முகம்மட் பூஸி ஹருன் கூறினார்.

நேற்று 68 பேர் கைதானதாகக் கூறப்பட்டிருந்தது.

ஆலயக் கலவரம்மீது விசாரணை மும்முரமாக நடந்து வருகிறது என்று கூறிய பூஸி, மேலும் எத்தனை பேர் கைதாவார்கள் என்பதை இப்போதைக்குக் கூற இயலாது என்றார்.