ஐஜிபி: ஆலயக் கலவரம் தொடர்பில் இதுவரை 99பேர் கைது

சுபாங் ஜெயா ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயக் கலவரம் தொடர்பில் மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கைதானவர் எண்ணிக்கை 99.

இதனைத் தெரிவித்த போலீஸ் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் முகம்மட் பூஸி ஹருன், நவம்பர் 26 மற்றும் 27-இல் ஆலயக் கலவரம் தொடர்பில் கைதான இவர்கள் அனைவருமே கிள்ளான் பள்ளத்தாக்கில் கைதானதாகக் கூறினார்.

“இன்று காலைவரை கைது செய்யப்பட்டவர் எண்ணிக்கை 99”, என பூஸி இன்று காலை கோலாலும்பூரில் போலீஸ் பயிற்சி மையத்தில் கூறினார்.

நேற்றுக் காலை பூஸி, ஆலயக் கலவரம் தொடர்பில் 83 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.