நாளைய நிகழ்வை ஒத்திவைப்பீர்: சுஹாகாமுக்கு போலீஸ் கோரிக்கை

நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்துலக மனித உரிமை நாள் கொண்டாட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் எனப் போலீஸ் சுஹாகாமுக்கு ஆலோசனை கூறியுள்ளது.

பெட்டாலிங் ஜெயா பாடாங் தீமோரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அந்நிகழ்வில் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.

“அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்து இறுதி முடிவு செய்யப்படுவதற்காகக் காத்திருக்கிறோம். அதை ஒத்திவைக்க வேண்டி நேரலாம்”, என்று ஒரு வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தது.

இதனிடையே, சுஹாகாம் நிகழ்வுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அனுமதி மீட்டுக்கொள்ளப்பட்டதை போலீஸ் வட்டாரமொன்று உறுதிப்படுத்தியுள்ளது.

நாளை டட்டாரான் மெர்டேகாவில் ஐசெர்ட்-எதிர்ப்புப் பேரணி நடைபெறும் அதே நேரத்தில் சுஹாகாம் நிகழ்வும் நடைபெறுவதாக இருந்தது.

டட்டாரான் மெர்டேகா பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.