சுஹாகாம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது

 

அனைத்துலக மனித உரிமைகள் தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும். அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் சுஹாம் தலைவர் ரஸாலி இஸ்மாயில் இதனைத் தெரிவித்தார்.

பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அபாயங்கள் குறித்து போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளதால் இந்நிகழ்ச்சியை 24 மணி நேரத்திற்கு தள்ளி வைக்க வேண்டிய கட்டாயம் ஆணையத்திற்கு ஏற்பட்டுள்ளது என்று அவர் விளக்கம் அளித்தார்.

பெட்டாலிங் ஜெயா, பாடாங் திமோரில் நாளை நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த இந்நிகழ்சி, அதே இடத்தில் அதே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று ரஸாலி தெரிவித்தார்.