300 சீலாட் குழு உறுப்பினர்கள் இஸ்தான நெகாராவுக்கு செல்கின்றனர்

சோகோ வியாபார மையத்தின்முன் 3,000 பேர், ‘ஹிடுப் இஸ்லாம்’ முழக்கம்

காலை மளி 11.00 அளவில் சோகோவின்முன் சுமார் 3,000 பேர் கூடியுள்ளனர். பல அரசு சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் பேசத் தொடங்கியுள்ளனர்.

பல ஆர்ப்பாட்டக்காரர்கள் ‘பன்தா ஐடெர்ட்” என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்த வெள்ளை டி-சட்டை அணிந்திருக்கின்றனர். அவர்கள் ‘ஹிடுப் இஸ்லாம்’, ‘பன்தா ஐசெர்ட்’, மற்றும் ‘பங்கிட் மெலாயு’ என்று முழங்கிக் கொண்டிருந்தனர்.

ஐநாவின் ஐசெர்ட் ஒப்பந்தம் அங்கீகரிக்கப்படாது என்று அரசாங்கம் எடுத்துள்ள முடிவைக் கொண்டாடுவதற்காக பல்லாயிரக்கணக்கானவர்கள் இன்று மதியம் கோலாலம்பூர் தெருக்களில் கூடுவார்கள்.

மலாய்-முஸ்லிம் அரசு சார்பற்ற அமைப்புகளால் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சிக்கு அம்னோவும் பாஸும் ஆதரவு அளித்துள்ளன.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் மூன்று வெவ்வேறான இடங்களில் கூடுவார்கள் – சோகோ, மஸ்ஜிட் ஜாமெக் மற்றும் மஸ்ஜிட் நெகாரா. அங்கிருந்து அவர்கள் டாத்தாரன் மெர்தேக்காவுக்கு அணிவகுத்துச் செல்வார்கள்.

இக்கூட்டம் பிற்பகல் மணி 2.00-க்கு தொடங்கி மாலை மணி 6.00-க்கு முடிவுறும். இது இனவாத நெருக்கடியை உருவாக்கும் சாத்தியம் இருப்பதாக பலர் அச்சம் தெரிவித்துள்ள வேளையில், இதன் ஏற்பாட்டாளர்கள் இப்பேரணி அமைதியானதாக இருக்கும் என்று உறுதியளித்துள்ளனர்.

காலை மணி 10.30 அளவில், சீலாட் குழு உறுப்பினர்கள் மஸ்ஜிட் விலாயா பெர்சிகூத்துவானின் கூடி அங்கிருந்து இஸ்தான நெகாராவை நோக்கி புறப்பட்டனர்.

பாஸின் அமல் பிரிவு 2,000 உறுப்பினர்களைப் பயன்படுத்தும் என்று ஹரகா ஓன்லைன் கூறுகிறது.

த ஸ்டார் செய்தியின்படி, 5,000 மாணவர்கள் தேசிய அளவில் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள்.