இன்று நடைபெறும் எல்லாவகை இனப் பாகுபாடுகளையும் ஒழிக்கும் அனைத்துலக ஒப்பந்த(ஐசெர்ட்)த்தை எதிர்க்கும் பேரணியில் கலந்து கொள்பவர்கள் சினமூட்டும் செயல்களில் இறங்கிவிடக் கூடாது என்று இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் முகம்மட் பூஸி ஹருன் அறிவுறுத்தியுள்ளார்.
போலீஸ் நேற்று முதல் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகாவும் எது நடந்தாலும் அதை அவர்கள் சமாளிப்பார்கள் என்றும் அவர் சொன்னார்.
காலையில் பல்வேறு இடங்களிலும் சுமார் 5,000 பேர் திரண்டிருந்ததாக அவர் கூறினார். பிற்பகலில் அவ்வெண்ணிக்கை கூடும் என்றவர் எதிர்பார்க்கிறார்.
“ஐசெர்ட் பேரணி மாலை 6க்குள் முடிவுக்கு வராதுபோனால் போலீஸ் அங்கே தங்கி நாளைக் காலைவரை நிலையைக் கண்காணித்து வருவர்”, என்றாரவர்.