இன்று பிற்பகல் 12.50 அளவில் மஸ்ஜித் நெகாரா வட்டாரத்தில் சுமார் 5,000 ஆர்ப்பாட்டாளர்கள் திரண்டிருந்ததாக போலீஸ் கூறியது.
அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரியும் அங்கு இருந்தார். அவர் ஆர்ப்பாட்டாளர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
போலீஸ் எச்சரிக்கையையும் மீறி சிலர் பிள்ளைகளையும் பேரணிக்கு அழைத்து வந்திருப்பதாக சினார் ஹரியன் கூறியது.
மலாய் மெயில் சில பெண்கள் கூடி நிற்பதைக் காண்பிக்கும் நிழற்படமொன்றை வெளியிட்டிருந்தது. அவர்களில் ஒருவர் கைக் குழந்தையை வைத்திருந்தார். அவருக்குப் பக்கத்தில் இன்னொரு குழந்தை நின்று கொண்டிருந்தது.
போலீஸ் குழந்தைகளை அழைத்து வராதீர்கள் என்று ஏற்கனவே கண்டிப்பாக எச்சரித்துள்ளது.
ஜாலான் ராஜா- ஜாலான் பார்லிமென் சந்திப்பில் சரக்குந்து ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு மேடையாக மாற்றப்பட்டுள்ளது.
அதற்கு 150 மீட்டர் தொலைவில் பாஸ் அமல் பிரிவினர்(கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் பிரிவு) கூட்டத்தினர் ஜாலான் ராஜாவுக்குள் நுழைவதைத் தடுத்து வருகின்றனர். அப்பிரிவின் அதிகாரி ஒருவர் பிற்பகல் மணி 2க்குத்தான் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.