நவம்பர் 26 சுபாங் ஜெயா ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயக் கலவரம் தொடர்பில் மேலும் நால்வர் கைதாகியுள்ளனர். அவர்களையும் சேர்த்து இன்று காலை 8மணிவரை அச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் எண்ணிக்கை 106 ஆகியுள்ளது.
இவர்கள் தவிர அச்சம்பவம் தொடர்பில் போலீசாரால் தேடப்படும் 66 பேரில் எழுவர் தாமே முன்வந்து சரணடைந்து வாக்குமூலம் அளித்திருப்பதாக இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் முகம்மட் பூஸி ஹருன் கூறினார்.
ஆலயக் கலவரத்தில் தாக்கப்பட்டுக் கடுமையாகக் காயமடைந்த தீயணைப்புப் படை வீரர் முகம்மட் அடிப் முகம்மட் காசிமிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு விட்டதா என்று வினவியதற்கு இன்னும் இல்லை என்றார். அடிப் முழுமையாகக் குணமடையவதற்காக போலிசார் காத்திருக்கின்றனர்.
“அவர் முழுமையாக தேறி வந்ததும் வாக்குமூலம் பதிவு செய்வோம்”, என்றாரவர்.