1எம்டிபி கணக்கறிக்கையில் மாற்றம் செய்ததற்காக நஜிப் கைது

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 1எம்டிபி கணக்குத் தணிக்கை அறிக்கையில் மாற்றம் செய்த குற்றத்துக்காக இன்று எம்ஏசிசி-ஆல் கைது செய்யப்பட்டார்.

இன்று காலை மணி 11க்கு மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத் தலைமையகம் வந்தபோது நஜிப் கைது செய்யப்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

இச்செய்தி எழுதப்படும்வரை அவர் எம்ஏசிசி காவலில்தான் உள்ளார் ஆனாலும் அவர் இன்று பிற்பகல் பிணையில் விடுவிக்கப்படுவார் எனத் தெரிகிறது.