பிரதமர்துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி, எம்ஏசிசியிடம் அறிவிப்பதற்குச் சொத்து என்று எதுவும் தம்மிடம் இல்லை என்றார்.
ஹிண்ட்ராப் தலைவருமான வேதமூர்த்தி, தாம் சம்பாதித்த பணமெல்லாம் மலேசிய இந்திய சமூகத்துக்குப் போராடுவதிலேயே செலவாகிப் போனதாகக் கூறினார்.
“காலம் முழுவதும் போராளியாக இருந்துள்ளேன். என் வருமானம் மொத்தத்தையும் ஏழைகளாகவுள்ள இந்தியர்களுக்குப் போராடுவதிலேயே செலவு செய்து விட்டேன்.
“நான் ஒரு வழக்குரைஞரும் ஆவேன். என்னிடம் சொத்து எதுவும் இல்லை. சம்பாதித்தது எல்லாம் அப்படியே போய்விட்டது”, என்றவர் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
13 எம்பிகள் இன்னும் அவர்களின் சொத்து விவரங்களை அறிவிக்கவில்லை என எம்ஏசிசி அறிவித்துள்ளது. அவர்களில் ஒருவர் வேதமூர்த்
வருத்தப்பட வேண்டிய விஷயம்.
மலேசிய இந்தியர்களுக்காகப் போராடி ஓட்டாண்டியான அமைச்சர் என்று துன் சம்பந்தனார் போன்று இவருக்கும் முத்திரைக் குத்தாமல் இருந்தால் சரி.
இதற்கு முன் இந்தியர்களுக்காக உழைக்கிறோம் போராடுகிறோம் என்று கூறிய குட்டி கட்சி முதல் இந்தியர்களைப் பிரதிநிதிக்கின்றோம் என்று கூறிய தலைவரிலிருந்து குட்டித் தலைவர் வரைக்கும் தனக்கு மிஞ்சனனுதான் தான தர்மம் என்று வாழ்ந்தனர்.
ஆனால் தற்கால அரசாங்கத்தில் பணம் சம்பாரிக்க வழியில்லை என்று வெளிப்படையாகவே தெரிகின்றது. அப்படியே வழி இருந்தாலும் இலஞ்ச ஊழல் இலாக்கா கண்ணைத் திறந்து கொண்டு கழுகு போல் பார்த்துக் கொண்டிருக்கின்றது.
நல்லதே செய்யுங்கள். காலம் தங்களைப் போற்றும். சிவசிவ.