மஇகா உதவித் தலைவர் சி.சிவராஜா, அவரது மேல்முறையீடு மீதான முடிவு தெரியும்வரை டேவான் ரக்யாட்(மக்களவை) கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொள்ளலாம் என அவைத் தலைவர் அரிப் முகம்மட் யூசுப் கூறினார். கேமரன் மலை தொகுதி காலியானதாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சிவராஜா மேல்முறையீடு செய்துள்ளார்.
“அதுவரை மாண்புமிகு கேமரன் மலை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்தான்”, என்று அரிப் இன்று மக்களவையில் அறிவித்தார்.
சிவராஜ் டிசம்பர் 5-இல் நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ள அவைத் தலைவர் தடை விதித்ததற்கு பிஎன் எம்பிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
கேமரன் மலை காலியானதாக அறிவித்தது ஒரு நீதிமன்றம் என்பதால் அவரது இப்போதைய நிலை என்னவென்பதையும் நீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும் என்றாரவர்.
உச்ச நீதிமன்றம் சிவராஜாவின் மேல்முறையீட்டை விசாரித்து நவம்பர் 30-இல் தேர்தல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிலைநிறுத்துவதா தள்ளுபடி செய்வதா என்பதை முடிவு செய்யும்.