இன்று காலை 9.45 மணியளவில், புத்ராஜெயா, ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமையகத்தில் இருந்தபோது, அருள் கந்தா கந்தசாமி கைது செய்யப்பட்டதாக எம்ஏசிசி உறுதி செய்தது.
“முன்னாள் பிரதமர் நஜிப்புடன், நாளை காலை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட அவர் அழைத்துச் செல்லப்படுவார்,” என்று அவரது வழக்கறிஞர் என் சிவநந்தன் எம்ஏசிசி கட்டிடத்திற்கு வெளியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
1எம்டிபி-யின் அந்த முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, இன்று காலை 10.35 மணியளவில் கைது செய்யப்பட்டதாக சிவானந்தன் தெரிவித்தார்.
அருள் எம்ஏசிசி லாக்கப்பில் இன்றிரவைக் கழிப்பார் என்றும் அவர் சொன்னார்.
இதுவரை, 1எம்டிபி தேசியத் தணிக்கை அறிக்கையில் மாற்றம் தொடர்பில், எம்ஏசிசி சட்டம் 2009-இன் 23-வது பிரிவின் கீழ், அருள் கந்தா மீது குற்றம் சாட்டப்படும் என்று மட்டுமே தனக்கு தெரியுமென அவர் மேலும் கூறினார்.
நேற்று, 1எம்டிபி இறுதி தணிக்கை அறிக்கையில் திருத்தங்கள் தொடர்பில், விளக்கமளிக்க வந்தபோது, நஜிப் எம்ஏசிசி-இல் இரண்டரை மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டார். பின்னர் எம்ஏசிசி-யின் உத்தரவாதத்தில் அவர் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.