அரசாங்கம்: இந்திரா வழக்கே போதும், தன்மூப்பான மதமாற்றத்துக்கு எதிராக தனிச் சட்டம் அவசியமில்லை

அரசாங்கம் சட்டச் சீர்திருத்த(திருமண, மணவிலக்கு)ச் சட்ட(எல்ஆர்ஏ)த்தில், தன்மூப்பான மதமாற்றத்தைச் சட்ட விரோதமாக்கும் பிரிவு 88ஏ-யை இணைக்கும் முயற்சியை மீண்டும் மேற்கொள்ளாது.

நடப்பில் சட்ட அமைச்சர் லியு வுய் கியோங், கூட்டரசு நீதிமன்றம் இந்திரா காந்தி வழக்கில் வயதுக்கு வராத பிள்ளைகளை மதமாற்றம் செய்ய பெற்றோர் இருவரின் இணக்கம் தேவை என்று தீர்ப்பளித்திருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

ஆக, பெற்றோரின் தன்மூப்பு மதமாற்ற விவகாரத்துக்கு கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பே நல்ல தீர்வாக அமைந்து விட்டது.

எல்ஆர்ஏ சட்டத்தில் இனி பிரிவு 88ஏ-யைச் சேர்க்க வேண்டிய அவசியமில்லை”, என்று நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் லியு கூறினார்.