நஜிப்பின் விசுவாசிகள் சாலே கெருவாக், பண்டிகார் அம்னோவிலிருந்து வெளியேறினர்

 

முன்னாள் தொடர்புத்துறை மற்றும் பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் சாபா அம்னோவிலிருந்து இன்று மதியம் வெளியேறினார்.

கடந்த பொதுத் தேர்தலில் அம்னோ மற்றும் பிஎன் தோற்கடிக்கப்படுவதற்கு முன்பு நஜிப் ரசாக்கின் மிக உறுதியான விசுவாசியாக சாலே இருந்தார்.

முன்னாள் சாபா முதலமைச்சராக இருந்த சாலே-யை 2015 ஆண்டில் நஜிப் அமைச்சரவை உறுப்பினாரக்கினார்.

இன்று மதியம் கோட்டா கினபாலுவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஒரு டஜனுக்கு கூடுதலாக இருந்த அம்னோ எம்பிகளும் சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சியை விட்டு வெளியேறி சுயேட்சைகளாக இருக்கப் போகும் அவர்களது முடிவை அறிவித்தனர்.

இருப்பினும், அவர்கள் தங்களுடைய ஆதரவை பக்கத்தான் ஹரப்பானும் பிரதமர் மகாதிருக்கும் தெரிவித்துக் கொண்டனர்.

1எம்டிபி விவகாரத்தில் நஜிப்புக்கு ஆதரவாக மகாதிரை கடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்தவர் சாலே.

மலேசிய நாடாளுமன்ற மக்களைவத் தலைவராக இரண்டு தவணைக்கு பதவியிலிருந்த பண்டிகார் அமின் மூலியாவும் சாபா அம்னோவிலிருந்து வெளியேறினார்.

இவ்வாண்டு செப்டெம்பரில் நடந்த அம்னோ பொதுச் சபை கூட்டத்தின் தலைவராக செயல்பட்ட பண்டிகார், அம்னோ தலைவர் அஹமட் ஸாகிட் ஹமிடியின் தலைமைத்துவத்திற்கு பேராதவு தெரிவித்ததுடன் கட்சியுடன் ஒத்துப்போகாதவர்களை அவர் கடுமையாக எச்சரித்தார்.