தேர்தல் ஆணையம், கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் புதிய தேர்தல் நடத்தப்படும் என்பதை இன்று உறுதிப்படுத்தியது.
4வது பொதுத் தேர்தலில் பிஎன்னுக்கு கேமரன் மலையில் கிடைத்த வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்ததற்கு எதிராக மேல்முறையீடு எதுவும் செய்யப்படாததை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டதாக இசி தலைவர் அஸ்ஹார் அசிசான் கூறினார்.
“நேற்றுவரை முறையீடு செய்வதற்கு அவகாசம் இருந்தது. கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படவில்லை, செய்யப்பட்டதாக தகவலும் இல்லை.
“எனவே இன்றிலிருந்து அத்தொகுதியாகக் காலியாக உள்ளதென்று இசி முடிவு செய்து கூட்டரசு அரசமைப்புப்படி 60 நாள்களுக்குள் அந்தத் தொகுதியை நிரப்ப நடவடிக்கை எடுக்கும்”, என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
அத் தொகுதி காலியான தகவல் திங்கள்கிழமை டேவான் ரக்யாட் தலைவருக்குத் தெரிவிக்கப்படும்.