நுருல் இஸ்ஸா அன்வார், பிகேஆர் உதவித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அதிர்ச்சிதரும் தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார். அவர் இனி, அரசாங்கப் பதவிகளிலும் இருக்கப் போவதில்லை.
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலின் மகளுமான நுருல் இஸ்ஸா இன்று பிற்பகல் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பினாங்கு பிகேஆர் தலைவர் பதவியிலிருந்தும் வெளியேறுவதாகக் கூறினார்.
பிகேஆர் தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நுருல் இஸ்ஸா மிக அதிக எண்ணிக்கை வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து இருந்து சீரமைப்புப் பணிகளில் ஈடுபடப் போவதாக அவர் தெரிவித்தார்.
சிரமப்பட்டுத்தான் இப்படி ஒரு முடிவுக்கு வர முடிந்தது, அதனால்தான் இந்த அறிவிப்பை முன்னரே செய்ய முடியவில்லை என்றவர் வருத்தப்பட்டார்.