இந்தோனேசிய சுனாமிக்குப் பலியானவர் எண்ணிக்கை 43ஆக உயர்ந்தது

இந்தோனேசிய பேரிடர் வாரியம், சனிக்கிழமை இரவு ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடைப்பட்ட பகுதியைத் தாக்கிய சுனாமியில் 43பேர் உயிரிழந்ததாகவும் 584பேர் காயமடைந்தனர் என்றும் கூறியது.

“சுன்டா நீரிணையைக் குறிப்பாக செராங், பண்டெக்லாங், தெற்கு லம்போங் ஆகிய பகுதிகளைத் தாக்கிய ஆழிப் பேரலையின் பாதிப்புகளைக் கணக்கிட்டு வருகிறோம்”, என்று மெட்ரோ தொலைக்காட்சியில் அதன் பேச்சாளர் சுதோபோ பூர்வோ நுக்ரோஹோ கூறினார். அனாக் கிராகாதாவ் எரிமலை வெடித்ததுதான் அந்த ஆழிப் பேரலைக்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.

அச்சம்பவத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்ததாக அவர் தெரிவித்தார்.

  • Reuters