ஜாரிங்கான் மலாயு மலேசியா (ஜேஎம்எம்) அதன் தலைவர் அஸ்வாண்டின் ஹன்சாவைப் போலீசார் கைது செய்துவிட்டதாகக் கூறிக்கொள்கிறது.
அதன் மின்னஞ்சல் ஒன்று அஸ்வாண்டின் இன்று பிற்பகல் 2.45க்கு டத்தோ கிராமாட்டில் கைது செய்யப்பட்டு கிள்ளான் உத்தாரா போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறிற்று.
முன்னதாக, சிலாங்கூர் சிஐடி தலைவர் பாட்சில் அஹ்மட் கிறிமினல் மிரட்டல் விவகாரங்கள் தொடர்பான குற்றவியல் சட்டம் 506-ஆவது பிரிவின்கீழ் அஸ்வாண்டின்மீது விசாரணை தொடங்கப்பட்டிருப்பதாக மலேசியாகினியிடம் தெரிவித்திருந்தார்.
நேற்றைய பேரணியில் உரையாற்றிய அஸ்வாண்டின் சீபீல்ட் ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்தில் கலகம் செய்தவர்களைக் கைது செய்யாவிட்டால் ஒரு காவல் நிலையத்தைத் தாக்கப் போவதாக மிரட்டினாராம்.
அஸ்வாண்டின் கைதானதை போலீசாரும் உறுதிப்படுத்தினர்.