அமைச்சர் தெரெசா கோ ஜாரிஞான் மிலாயு மலேசியா (ஜெஎம்எம்)-வின் தலைவர் அஸ்வாண்டினிடமிருந்து அவர் கூறியதைத் திரும்பப் பெறுதல், மன்னிப்பு கோருதல் மற்றும் ரிம30 மில்லியன் இழப்பீடு ஆகியவற்றை கோருகிறார்.
சீபீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் நடைபெற்ற ஒரு கலவரத்தில் தம்மைத் தொடர்பு படுத்தி நேற்று அவர் பேசியதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அமைச்சர் கோவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு அவரது வழக்குரைஞர் நிறுவனம் எஸ்என் நாயர் & பார்ட்னர்ஸ் அஸ்வாண்டினுக்கு ஏழு நாள் அவகாசம் அளித்துள்ளது.
அஸ்வாண்டின் கூற்று போலியானது, தீய எண்ணமுடையது மற்றும் முறைகேடானது என்று வழக்குரைஞரின் கடிதம் கூறுகிறது.
நேற்று, கிள்ளானின் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் மலாய்-உரிமைகள் ஆர்வலரான அஸ்வாண்டின், கோவில் அமைந்திருக்கும் நிலத்திற்குச் சொந்தக்காரரான மேம்பாட்டாளருக்கும் அமைச்சர் கோவிற்கும் தொடர்பு உண்டு என்று கூறினார்.
மேலும், அந்த நில மேம்பாட்டாளருக்கும் தமக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை கோ மறுக்கவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
ஆனால், கோ கடந்த மாதம் இதை மறுத்துள்ளார்.
யுஎஸ்எ இந்துக் கோவில் விவகாரத்தில் என்னை இழுப்பதை நிறுத்துங்கள். அந்த மேம்பாட்டாளருடன் எனக்கு எந்த உறவும் இல்லை; அந்தத் திட்டத்தோடு தமக்கு ஈடுபாடு எதுவும் கிடையாது என்று திரேசா கோ மேலும் கூறினார்.