தாபோங் ஹரப்பான் ரிம200 மில்லியன் இலக்கை அதன் இறுதி வாரத்தில் எட்டிவிட்டது

 

புத்ரா ஜெயாவின் தாபோங் ஹரப்பான் அதன் ரிம200 மில்லியன் திரட்டும் இலக்கை அது இன்னும் ஒரு வாரத்திற்குள் மூடப்படுவதற்கு முன்பே எட்டிவிட்டது.

இன்று பிற்பகல் மணி 3.00 அளவில், அந்த நிதியம் ரிம200,032,580.24-ஐ பெற்றிருந்தது.

பெடரல் அரசாங்கத்தின் கடனைக் குறைக்கும் முயற்சியாக மக்கள் நிதி உதவி அளிப்பதற்கு பக்கத்தான் ஹரப்பான் நிருவாகம் கடந்த மே மாதம் தாபோங் ஹரப்பானை அமைத்தது.

டிசம்பர் 31-இல் இந்த நிதி திரட்டல் முடிவுக்கு வரும்.

இந்நிதி முறையாகக் கையாளப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு தேசிய கணக்காய்வாளர் இலாகா ஒரு கணக்காய்வை மேற்கொள்ளும் என்று அரசாங்கம் கூறியது.