ஓர் அமைச்சரவை முன்னாள் உறுப்பினரின் சிறப்பு அதிகாரிக்கு ரிம80,000 சம்பந்தப்பட்ட விவகாரத்தில் ஷா அலாம் செசன்ஸ் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டு சிறைதண்டணையும் ரிம400,000 அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்தது.
ஸைலான் ஜவ்ஹாரி, 48, என்ற நபருக்கு நீதிபதி ரோஸைலா சாலே இத்தண்டனையை விதித்தார். ஸைலானுக்கு எதிரான அரசு தரப்பு குற்றச்சாட்டிற்கு எதிரான எதிர்தரப்பு வாதம் எந்த சந்தேகத்தையும் எழுப்பத் தவறி விட்டது என்று நீதிபதி கூறினார்.
எதிர்தரப்பு வாதம் நேர்மையற்றதாகவும் ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இல்லை, எல்லாம் வெறும் மறுப்பு தெரிவித்தலாகவே இருந்தது என்று நீதிபதி மேலும் கூறினார்.
இரு நிறுவனங்கள் கோலசிலாங்கூரில் ஒரு பள்ளிக்கூடத்தில் குத்தகை பெறுவதற்கு ரிம20,000-தையும் ரிம60,000க்கான ஒரு காசோசலையையும் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இக்குற்றச்சாட்டை அவர் கோலசிலாங்கூரில் ஜனவரி 8, 2014-இல் புரிந்தார்.
இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப் போவதாக ஸைலானின் வழக்குரைஞர் முகமட் யுனூஸ் ஷரிப் நீதியிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து தண்டனை நிறைவேற்றம் தள்ளி வைக்கப்பட்டது.
ஆனால், நீதிபதி ஸைலானின் பிணையை ரிம30,000 லிருந்து ரிம50,000க்கு ஒரு பிணையில் உயர்த்தினார்.