கோலாலும்பூர் கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள இந்து கோயில்கள் அனைத்தும் கோலாலும்பூர் மாநகராண்மைக் கழக(டிபிகேஎல்)த்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.
டிபிகேஎல்லுக்கு ஆலயங்களின் முழுப் பட்டியல் தேவைப்படுகிறது. அது, கோயில்கள் கட்டப்பட்டுள்ள நிலங்களின் தகுதி, அவற்றின் பராமரிப்பாளர்கள் போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஷாருடின் முகம்மட் சாலே கூறினார்.
அப்படி ஒரு பட்டியல் இருக்குமானால், பதிவு செய்யப்படாத ஆலயங்கள்மீது நடவடிக்கை எடுக்க எளிதாக இருக்கும்.
“பல ஆலயங்களைப் பற்றி முழுமையான விவரங்கள் எங்களிடம் இல்லை. சில இருப்பதுகூட எங்களுக்குத் தெரியாது. அதனால்தான் ஒவ்வொரு ஆலயத்தையும் பதிந்து கொள்வது முக்கியமாகும்”, என்றாரவர்.