மாணவர்களின் மருத்துவச் சோதனைக்கு ரிம100 கட்டணமா? மறுக்கிறது அமைச்சு

அரசாங்கப் பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் அதற்காக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வதற்கு ரிம 100 கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டிருப்பதைச் சுகாதார அமைச்சு மறுக்கிறது.

முழு தங்குவசதி கொண்ட பள்ளிகள் உள்பட எல்லா அரசாங்கப் பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவச் சோதனைக்கான கட்டணம் ரிம1தான் எனச் சுகாதார அமைச்சு தலைமைச் செயலாளர் டாக்டர் சென் சாவ் மின் கூறினார்.

ஆனால், தனியார் பள்ளி மாணவர்களுக்குக் கட்டணம் ரிம100 என்றாரவர்.

நேற்று அல் கயர் என்பார், தங்குவசதி கொண்ட பள்லிகளில் சேரும் மாணவர்கள் மருத்துவச் சோதனைக்கு ரிம100 ரிங்கிட் கொடுக்க வேஎண்டியிருப்பதாக முகநூலில் கூறியிருந்தார்.

ரிம100 கட்டணம் என்பது அரசாங்கத்தின் புதிய கொள்கை என்று மருத்துவமனை நிர்வாகம் தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பெர்னாமா