ஊழல் குற்றத்துக்காக பினாங்கில் கூட்டரசு அரசாங்க நிறுவனத்தின் இயக்குனர் கைது

மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி), கூட்டரசு அரசாங்க அதிகாரி ஒருவரை அதிகாரமீறலில் ஈடுபட்ட குற்றதுக்காக கைது செய்துள்ளது.

அரசாங்க நிறுவனம் ஒன்றின் இயக்குனரான அந்நபர், 58, காலை மணி எட்டுக்கு பினாங்கு எம்ஏசிசி அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.

அந்த இயக்குனர் மாநில அரசின் பாலர் பள்ளித் திட்டத்துக்கான குத்தகை தன் மகனின் நிறுவனத்துக்கே கொடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார் என எம்ஏசிசியின் அறிக்கை ஒன்று கூறியது.

“அந்நபர் இன்று பிற்பகல் ஜார்ஜ்டவுன் மெஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அவரது தடுப்புக் காவல் நீட்டிக்கப்படும்”, என எம்ஏசிசி விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.