ஜனவரி 26 கேமரன் மலை இடைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாள்கள் எஞ்சியுள்ள வேளையில் இதுவரை ஐந்து வேட்புமனுக்கள் விற்றிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
பல்வேறு அரசியல் கட்சிகள் அந்த மனு பாரங்களை வாங்கிச் சென்றதாக பகாங் இசி இயக்குனர் ஜம்ரி ஹமில் தெரிவித்தாக நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் கூறியது. அவர் மேலும் பல மனுபாரங்கள் விற்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கிறார்.
“சுயேச்சைகள் சிலர் போட்டியிடுவதில் ஆர்வம் கொண்டிருப்பதாக பேச்சு அடிபடுகிறது. அதனால் மேலும் பல பாரங்கள் விற்கப்படலாம்.
“ஆர்வம் உள்ளவர்கள் எங்களை அணுகலாம்”, என்றவர் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக இதுவரை இருவர் மட்டுமே– பகாங் டிஏபி துணைத் தலைவர் எம். மனோகரன் , சர்ச்சைக்குரிய மைபிபிபி தலைவர் எம். கேவியெஸ்- அறிவித்துள்ளனர்.
பிஎன் அதன் வேட்பாளரை நாளை அறிவிக்கப் போவதாகக் கூறியுள்ளது.
கேமரன் மலையில் பிஎன் கட்சிகளில் ஒன்றான மஇகாதான் போட்டியிடுவது வழக்கம் ஆனால், இம்முறை அம்னோ அதன் ஆளை நிறுத்தலாம் அல்லது ஒராங் அஸ்லி ஒருவரை வேட்பாளராக களமிறக்கலாம் என்று கூறப்படுகிறது.
14வது பொதுத் தேர்தலில் பாஸ், பிஎஸ்எம் இரண்டும்கூட கேமரன் மலையில் போட்டியிட்டன. இம்முறை அவை போட்டியிடா என்று கருதப்படுகிறது.
கேமரன் மலை தொகுதியில் 34 விழுக்காடு மலாய்க்காரர்கள், 30 விழுக்காடு சீனர்கள், 15 விழுக்காடு இந்தியர்கள், 22 விழுக்காடு ஓராங் அஸ்லிகள்