‘ஐயா, நான் ஒரு சீரியல் கொலைகாரன்’ -நஜிப் கிண்டல்

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பலரையும் கொன்றதாக தாம் குற்றஞ்சாட்டப்படுவதைப் பார்க்கையில் தானொரு சீரியல் கொலைகாரனாகத்தான் இருக்க வேண்டும் என்று கிண்டலடித்தார்.

“நான்தான் அல்டான்துயா(ஷரீபு)வைக் கொன்றதாக பலர் நம்புகிறார்களாம்(ஒருவர் தெரிவித்தார்).

“கெவின் மொராய்ஸைக் கொன்றதும் நான்தானாம். அப்புறம் (பி) பாலசுப்ரமண்யம், அவரையும் நான்தான் கொன்றேனாம்.

“இப்படிப் பலரையும் கொன்ற நான் ஒரு சீரியல் கொலைகாரனாகத்தான் இருக்க வேண்டும்”, என நஜிப் நேற்றிரவு லங்காவில் ஒரு செராமாவில் கூறினார்.

எல்லாமே, பக்கத்தான் ஹரப்பான் பரப்பிவரும் பொய்கள் என்றாரவர். இந்தப் பொய்களாலும் புரட்டுகளாலும்தான் 14வது பொதுத் தேர்தலில் பிஎன் ஆட்சி அதிகாரத்தை இழந்தது.

அல்டான்துயா மங்கோலியா நாட்டைச் சேர்ந்தவர். அவர் நஜிப்பின் நம்பிக்கைக்குரியரான அப்துல் ரசாக் பாகிண்டாவின் காதலி.

அல்டான்துயாவின் உறவினர் ஒருவர் அவர், ரசாக் பாகிண்டாவுடனும் நஜிப்புடனும் இருக்கும் புகைப்படமொன்றைப் பார்த்ததாகக் கூறினார்.

ஆனால், நஜிப் அவரைப் பார்த்ததே இல்லை என மறுக்கிறார்.

அல்டான்துயா இறந்தது 2006-இல். அவரது வழக்கில் முக்கிய சாட்சி பாலசுப்ரமணியம் . அவர் 2013-இல் மாரடைப்பினால் காலமானார்.

கெவின் மொராய்ஸ் எம்ஏசிசி-இன் வழக்குரைஞர்களில் ஒருவர். அவர் 1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு எதிரான குற்றச்சாட்டுகளைத் தயாரித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.

ஆனால், எம்ஏசிசி அதை மறுக்கிறது. நஜிப்புக்கு எதிரான குற்றச்சாட்டுகளைத்