அமைச்சரவை மாற்றமா? பொய்யான செய்தி- மகாதிர்

சீனப் புத்தாண்டு விடுமுறைகளுக்குப் பின்னர் அமைச்சரவை மாற்றம் நிகழப்போவதாக வதந்தி உலவுகின்றது. அந்த வதந்தியை நம்ப வேண்டாம், அது “பொய்” என்கிறார் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்

“அமைச்சரவையில் மாற்றமிராது” என்றாரவர். மகாதிர் இன்று, கோலாலும்பூரில் மலேசிய சீன வர்த்தக, தொழில்துறைகளின் சங்கத்தின் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

“அமைச்சரவை அப்படியேதான் இருக்கப் போகிறது. அது வதந்தி , பொய்யான செய்தி”, என வலைத்தளம் ஒன்றில் பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலி சீனப் புத்தாண்டுக்குப் பின்னர் துணைப் பிரதமராக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டிருப்பது குறித்து கேட்டதற்கு மகாதிர் பதிலளித்தார்.